தமிழகத்தில் 3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-23 03:34 GMT
சென்னை,

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் 3.1 கி.மீ. வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில்  உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 25 முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில்  அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கனமழை அறிவிப்பு வெளியாகி இருப்பதால், பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்