‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியல் - முதல் 10 இடங்களில் கோவை, திருச்சி

நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் ‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியலில் கோவை, திருச்சி

Update: 2021-11-24 01:54 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடு அடிப்படையில் முதல்முறையாக தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 56 நகரங்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2030-ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் வெற்றி கண்ட நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதில், சிம்லா, கோவை, சண்டிகார், திருவனந்தபுரம், கொச்சி, பனாஜி, புனே, திருச்சி, ஆமதாபாத், நாக்பூர் ஆகிய 10 நகரங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. மீரட், ஆக்ரா, கொல்கத்தா போன்ற நகரங்கள் மோசமான செயல்பாட்டுக்காக கடைசி இடங்களில் உள்ளன.

மேலும் செய்திகள்