ஐ.ஐ.டி.யில் இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஐ.ஐ.டி.யில் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-24 20:03 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

ஐ.ஐ.டி.களில் பேராசிரியர் பணியிலும், ஆய்வு மாணவர் சேர்க்கையிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த சச்சிதானந்த் பாண்டே தாக்கல் செய்த இந்த மனு, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் அஸ்வினி துபே ஆஜராகி, ஐ.ஐ.டி.களில் இடஒதுக்கீடு கொள்கை முறையாக பின்பற்றப்படுவதில்லை. இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணியமர்த்தப்பட்டுள்ள பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என வாதிட்டார்

வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், ஐ.ஐ.டி.களில் பேராசிரியர் பணியிலும், ஆய்வு மாணவர் சேர்க்கையிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்