கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழையால் கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-26 05:52 GMT
திருவனந்தபுரம்,

தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 2 நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனிடையே இடுக்கி, முல்லைப் பெரியாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

இதையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பட்டணம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்