நாட்டின் வளர்ச்சிக்கு உ.பி முக்கிய பங்கு வகிக்கிறது - யோகி ஆதித்யநாத்

நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரபிரதேசம் முக்கிய பங்கு வகிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-02 13:49 GMT
லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக பல்வேறு நலத்திட்டபணிகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் ஷாஹரன்பூர் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரபிரதேசம் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் உத்தரபிரதேசம் தற்போது வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டி சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இந்த பல்கலைக்கழகம் ஒரு உதாரணமாகும்’ என்றார்.

மேலும் செய்திகள்