பெங்களூரு அருகே அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்

பெங்களூரு அருகே அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது

Update: 2021-12-22 06:23 GMT
பெங்களூரு:

 கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வடக்கு-வடகிழக்கு பகுதியில் இன்று காலை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்எஸ்சி) தெரிவித்துள்ளது.

இன்று காலை 7:09  மணிக்கு நில நடுக்கம்  3.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டு உள்ளது.  பெங்களூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் 11 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அதேபோல்  இன்று காலை 7:14 மணிக்கு இரண்டாவது முறை நில நடுக்கம்  3.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டு உள்ளது.  பெங்களூரில் இருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் 23 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்