கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்நாடகாவில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா? - இன்று முக்கிய முடிவு

கர்நாடகத்தில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது.

Update: 2022-01-04 08:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு உட்பட கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதே போல் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொற்ற பரவல் அதிகரி்தது வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த ஊரடங்கு தீவிரப்படுத்துவது குறித்து இன்று மாலை 6 மணி அளவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மருத்துவ நிபுணர் குழு, சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

ஆலோனையின் முடிவில் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளனர். குறிப்பிடும்படியாக, இக்கூட்டத்தின் முடிவில் ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்