திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

Update: 2022-01-06 02:42 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி யுகாதி பண்டிகை, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் நடப்பதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம்.

அதன்படி வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அதையொட்டி காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், கூரை, பூஜை பாத்திரங்கள், கொடிமரம் உள்பட பல்வேறு இடங்கள் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

அதன் பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூரணம், பச்சை கற்பூரம், கிஜிலி கட்டை உள்ளிட்ட சுகந்த திரவியம் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. இதனால் 11-ந்தேதி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 10-ந்தேதி சிபாரிசு கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன, என்று அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்