உலகின் மிக பெரிய தேசிய கொடி; எல்லையில் காட்சிக்கு வைக்க முடிவு

ராணுவ தினத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உலகின் மிக பெரிய தேசிய கொடி காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Update: 2022-01-14 22:44 GMT

புதுடெல்லி,



நாட்டின் ராணுவ தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ தினத்தில் (சனிக்கிழமை) இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில், ஜெய்சால்மர் பகுதியில் காதி துணியால் உருவாக்கப்பட்ட உலகின் மிக பெரிய தேசிய கொடி பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 1971ம் ஆண்டில் நடந்த வரலாற்று போரின் மைய பகுதியான லாங்கிவாலா என்ற இடத்தில் கொடி காட்சிக்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.  இந்த கொடி 225  அடி நீளம், 150 அடி அகலம், 1,400 எடை கொண்டது.

மேலும் செய்திகள்