உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது,முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுகிறார்

Update: 2022-01-15 08:21 GMT

லக்னோ

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை  பாஜக தலைவரும், மத்திய மந்திரியுமான தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள்,  2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அறிவிக்கபட்டது.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில்  57 வேட்பாளர்களும் , இரண்டாம் கட்ட தேர்தல்   நடைபெறும் 55 இடங்களிலும் 38வேட்பாளர்கள்  பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தலில் கோரக்பூரில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். பூல்பூரில் உள்ள சிரத்து தொகுதியில் துணை முதல் மந்திரி கேசவ் மவுரியா போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்