காஷ்மீரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு

காஷ்மீரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி சென்றுள்ளனர்.

Update: 2022-01-17 18:00 GMT

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப நாட்களாக போலீசார் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து காணப்படுகிறது.  ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் சரப் கடால் பகுதியில் போலீசாரின் ரோந்து வாகனம் ஒன்றின் மீது கடந்த ஞாயிற்று கிழமை மாலை 6.40 மணியளவில் பயங்கரவாதிகள் திடீரென பதுங்கி இருந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், மெஹ்ராஜ் அகமது என்ற போலீஸ் அதிகாரி மற்றும் சர்தாஜ் அகமது பட் என்பவர் காயமடைந்தனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றின் மீது இரவு 7.45 மணியளவில் திடீரென வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டு ஒன்றை வீசி சென்றுள்ளனர்.  இதில் யாரும் காயமடையவில்லை.  இதனை தொடர்ந்து, அந்த பகுதி போலீசாரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்