உத்தரகாண்ட் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்: காங்கிரசில் இருந்து விலகியர்களுக்கு முன்னுரிமை..!

உத்தரகாண்ட் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் காங்கிரசில் இருந்து விலகியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

Update: 2022-01-22 02:17 GMT
டேராடூன், 

70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 59 வேட்பாளர்களை கொண்ட முதலாவது பட்டியலை பா.ஜ.க. நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தவர்களுக்கே அக்கட்சி முன்னுரிமை வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த மாநில முன்னாள் மகளிர் காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா மற்றும் துர்கேஷ்வர் லால் உள்ளிடோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2017-ல் மந்திரிகளாக பதவி வகித்தவர்கள் உள்பட காங்கிரசில் இருந்து விலகிய பலருக்கு அவர்களின் சொந்த தொகுதியிலேயே போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்