தேசிய பேரிடர் மீட்பு படையின் டுவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது!

தேசிய பேரிடர் மீட்பு படையின் டுவிட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டதையடுத்து சைபர் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2022-01-24 04:28 GMT
புதுடெல்லி, 

தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.) டுவிட்டர் கணக்கில் ‘ஹேக்கர்’கள் நேற்று முன்தினம் இரவில் சட்ட விரோதமாக ஊடுருவி விட்டனர். இதில் சீரற்ற செய்திகள் சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆனாலும், இந்த கணக்கின் அதிகாரப்பூர்வ காட்சி படம் மற்றும் சுய தகவல்கள் காணக்கூடியதாக இருந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த கணக்கை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் சில நிமிடங்களில் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஹேக் நடவடிக்கை தொடர்பாக டெல்லி போலீசின் சைபர் பிரிவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்