கேரளாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது- பல ரயில்கள் ரத்து

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது.

Update: 2022-01-28 05:26 GMT
கொச்சி

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதைத் தொடர்ந்து ஷோர்னூர்-எர்ணாகுளம் வழித்தடத்தில் இன்று அதிகாலையில் இருந்து ரயில் போக்குவரத்து தடைபட்டது.
இரவு 10.30 மணியளவில் ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் நுழையும் போது சரக்கு ரயிலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வேகன்கள் தடம் புரண்டன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சில ரயில்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டதால், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது இதனால் பல ரயில்கள் ரத்து செய்யபட்டன.

தடம் புரண்ட சரக்கு ரயில் 42 வேகன்களுடன் ஆலுவா மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களில் இறக்குவதற்காக தமிழகத்தில் இருந்து சிமென்ட் ஏற்றிச் சென்றதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்