மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை- கர்நாடக அரசு உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பரவல் குறைந்து வருகிறது.

Update: 2022-02-12 16:25 GMT
பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பரவல் குறைந்து வருகிறது. கர்நாடகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதனல் கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன, ஆனால் மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு மட்டும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவில் அமலில் இருந்தது.

இந்த நிலையில் இனிமேல் மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று கூறி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டியிருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்