காஷ்மீரில் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் டிரோன்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு..!

காஷ்மீரில் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் டிரோன் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Update: 2022-03-05 23:55 GMT
கோப்புப்படம்
ஜம்மு, 

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை காஷ்மீருக்குள் வீசி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள அர்னியா பகுதியில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் அர்னியா பகுதியில் நேற்று அதிகாலை 4.10 மணியளவில் டிரோன் பறக்கும் சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 10 நிமிடங்களில் 18 ரவுண்டுகள் சுட்டனர்.

எனினும் டிரோன் வீழ்த்தப்பட்டதா அல்லது தப்பி சென்றதா என்ற விவரங்கள் தெரியவரவில்லை. அதே சமயம் டிரோன் ஆயுதங்கள் அல்லது போதைப் பொருட்களை வீசி சென்றதா என்பதை உறுதிப்படுத்த அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்