உப்பள்ளியில் அரசு பஸ்சில் ஆசிரியையிடம் 3 பவுன் நகை திருட்டு

உப்பள்ளியில் அரசு பஸ்சில் ஆசிரியையிடம் 3 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.;

Update:2023-08-28 00:15 IST

உப்பள்ளி-

கதக் மாவட்டம் லட்சுமேஷ்வரம் பகுதியை சேர்ந்தவர் சுவேதா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சுவேதா நேற்று முன்தினம் சிரகுப்பி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றாா். பின்னர் உறவினர் வீட்டில் இருந்து திரும்பி லட்சுமேஷ்வரம் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது சுவேதா உப்பள்ளி டவுன் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது லட்சுமேஷ்வரம் செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி இருக்கையில் சுவேதா அமர்ந்து இருந்தார். அப்போது பின் இருக்கையில் அமர்ந்து இருந்த நபர் ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். அவரை சக பயணிகள் துரத்தி சென்றனர். ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சுவேதா, வித்யாநகர் ேபாலீசில் புகார் அளித்தாா்.

அதன்பேரில் வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்கச்சங்கிலியை திருடிச்சென்ற நபரையும் போலீசார் தேடிவருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்