விசாகப்பட்டினத்தில் 'கியாஸ் சுழலி' சோதனையில் 4 கடற்படை வீரர்கள் காயம்

விசாகப்பட்டினத்தில் கியாஸ் சுழலி சோதனையில் 4 கடற்படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.;

Update:2022-06-30 02:21 IST

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில், கப்பல் கியாஸ் சுழலி (டர்பைன்) சோதனை மையமான ஐ.என்.எஸ். எக்சிலா உள்ளது. அங்கு ஒரு கியாஸ் சுழலியை சோதிக்கும் முயற்சியில் 4 கடற்படை வீரர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட விபத்தில் 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் கடற்படை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்