குடகில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 6½ கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர் கைது

குடகில் இருந்து கேரளாவுக்கு 6½ கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-22 19:15 GMT

குடகு;


குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விராஜ்பேட்டை போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசாரை பார்த்ததும் சரக்கு வேனை சிறிது தூரத்துக்கு முன்பே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார். இதையடுத்து போலீசார், அந்த நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் சரக்கு வாகனத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில், கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரக்கு வாகன டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், ஒடிசாவை சேர்ந்த சூர்யகாந்தி மொஹந்தி (வயது 36) என்பதும், அவர் விராஜ்பேட்டையில் இருந்து கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 6 கிலோ 480 கிராம் கஞ்சா, ஒரு கார், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்