அசாம்: கவுகாத்தியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழப்பு.!

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.;

Update:2023-05-29 09:38 IST

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் ஏழு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் சிலர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது கல்லூரி மாணவர்கள் என்றும், மாணவர்கள் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வேன் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்