இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள் - தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-02-09 11:28 GMT

புதுடெல்லி,

2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியாகவும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியாகவும் உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட 2024ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்து. பாலின விகிதம் 2023ம் ஆண்டு 940 ஆக இருந்த நிலையில், 2024ம் ஆண்டு 948 ஆக அதிகரித்துள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்