மனநலம் பாதித்த 15 வயது சிறுமி டாக்சியில் கடத்தி பாலியல் பலாத்காரம்

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை டாக்சியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-01 13:05 GMT

மும்பை,

மும்பையை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, கடந்த 28-ந்தேதி அதிகாலை 1 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே வந்து சாலையில் நின்று வாகனங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக டாக்சியில் வந்த டிரைவர் ஒருவர், சிறுமி நள்ளிரவு வேளையில் தனியாக நிற்பதை கண்டார்.

பின்னர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து மும்பையை சுற்றி காட்டுவதாக கூறி அழைத்துள்ளார். இதனை நம்பிய சிறுமி டாக்சியில் ஏறினாள். இதையடுத்து டாக்சி டிரைவர் தாதர் மேற்கு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே உள்ள வீட்டிற்கு சிறுமியை கடத்தி சென்றார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் சிறுமியை அவள் நின்ற இடத்திற்கு கொண்டு போய் விட்டார். மேலும் சிறுமியிடம் மீண்டும் சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுமாறு தனது செல்போன் நம்பரை எழுதி கொடுத்து உள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செல்போன் நம்பர் மூலம் விசாரித்தனர்.

இதில், வடலாவை சேர்ந்த டாக்சி டிரைவர் முகமது ஜலீல் (வயது33) என்பவர் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்