கடன் தொல்லையால் தூக்கில் தொங்கிய தம்பதி; கணவன் சாவு

பண்ட்வால் அருகே கடன் தொல்லையால் தம்பதி தூக்குபோட்டு தற்ெகாலைக்கு முயன்றனர். இதில் கணவர் உயிரிழந்தார்

Update: 2023-07-02 18:45 GMT

மங்களூரு-

பண்ட்வால் அருகே கடன் தொல்லையால் தம்பதி தூக்குபோட்டு தற்ெகாலைக்கு முயன்றனர். இதில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடன் தொல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா அனந்தாடி -பக்கிலா பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது35). இவரது மனைவி வீணா(30). இவர்களுக்கு 5 வயதில் இரட்டை பெண் குழந்தை உள்ளது. பிரதாப் அப்பகுதியில் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் பிரதாப் வங்கி, நண்பர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள் பிரதாப்பிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதில் பிரதாப் மன கவலையில் இருந்து வந்தார். கடன் பிரச்சினை குறித்து மனைவியிடம் பிரதாப் கூறி அழுது உள்ளார். அதற்கு அவர் கவலை படாதீங்க கடனை ஒரு மாதத்தில் கொடுத்து விடலாம் என பிரதாப்பிடம் கூறினார்.

தற்கொலை முயற்சி

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பிரதாப்பிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரதாப், வீணா ஆகியோர் தற்கொைல செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றனர். அப்போது வீணா வீட்டிற்கு பக்கத்து வீட்டை சேர்ந்்த ஒருவர் வந்துள்ளார். பிரதாப், வீணா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரதாப் பரிதாபமாக இறந்தார். வீணாவிற்கு புத்தூர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்