அமிர்தசரஸ் நகரில் 3 கிலோ ஹெராயினை போட்டு விட்டு தப்பி சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானம்

பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் அமிர்தசரஸ் நகரில் 3 கிலோ ஹெராயின் என்ற போதை பொருளை போட்டு விட்டு தப்பி சென்றது.

Update: 2023-03-11 17:37 GMT



சண்டிகர்,


பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள தனோய் கலான் என்ற கிராமத்திற்குள் புகுந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று வயல்வெளி பகுதியில், 3 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை போட்டு விட்டு தப்பி சென்றது.

அந்த பகுதியில் ரோந்து பகுதியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு நேற்று நள்ளிரவில் ஓடி வந்து உள்ளனர்.

அதனை கண்டதும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்து உள்ளனர். எனினும், அந்த ஆளில்லா விமானம் தப்பி பாகிஸ்தானுக்கு திரும்பி போய் விட்டது.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பி.எஸ்.எப். படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், பிங்க் வண்ணத்தில் பொட்டலம் ஒன்றை கண்டெடுத்தனர்.

அதில் இருந்த 3 பாக்கெட்டுகள் இருந்து உள்ளன. மொத்தம் 3.05 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.21 கோடி என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்