விமான பயணிகளுக்கு ஒரு ஷாக்..! அதிரடியாக அதிகரித்த விமான கட்டணம்

கோடை விடுமுறை காலத்திற்கான விமான முன் பதிவு கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

Update: 2023-01-28 12:09 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகளின் போது, 2020இல், விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு ஒன்றை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விதித்திருந்தது. சூழல்களுக்கு ஏற்ப மாற்றப்பட்ட இந்த உச்ச வரம்பு, 2022 ஆகஸ்ட் 31இல் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு விமானக் கட்டணங்கள் படிப்படியாக உயரத் தொடங்கி, கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையின் போது வெகுவாக அதிகரித்து. தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், கோடை விடுமுறை காலத்திற்கான முன் பதிவு கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

ஏப்ரல், மே மாதங்களில், சென்னை கோவா பயணத்திற்கான கட்டணம் 4 ஆயிரத்து 400 ரூபாயாகவும், சென்னை டெல்லி கட்டணம் 6 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சென்னை மதுரை கட்டணம் 4 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை துபாய் பயணக் கட்டணம் 16 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்