குஜராத் தேர்தல் : காங்கிரஸ் வாக்குவங்கியில் ஓட்டை போட்ட ஆம் ஆத்மி துடைப்பம்

குஜராத்தில் காங்கிரசின் வாக்கு வங்கியை வெகுவாக சரித்த ஆம் ஆத்மி கட்சி

Update: 2022-12-08 10:56 GMT

அகமதாபாத்

குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மாலை 4 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 182 இடங்களில் 83 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 74-க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்7 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது 9 இடங்களிலுல் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 2 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், பாஜகவிற்கு மாற்று தாங்கள்தான் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் ஆம் ஆத்மி அதிரடி பிரச்சார வியூகங்களை அமைத்தது. பஞ்சாபில் பிரபல நகைச்சுவை நடிகரான பகவந்த் மான் முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது நல்ல பலன்கொடுத்ததால், குஜராத்திலும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் முதல் மந்திரி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அம்மாநிலத்தில் பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பான விவாதங்களை நடத்தி மக்களிடையே நன்கு அறிமுகமாகியிருந்த மூத்த ஊடகவியலாளரான இசுதான் காத்வி முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படிருந்தார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி வெகுவாக சரிந்து உள்ளது. காங்கிரஸ் 4 மணி நிலவரப்படி 27 .28சதவீத வாக்குகளை பெற்று உள்ளது. பா.ஜ.க. 52.51 சதவீதம் பெற்று உள்ளது. ஆம் ஆத்மிக்கு 12.90 சதவீத வாக்கு கிடைத்து உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்