அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.;

Update:2023-03-26 03:33 IST

இடாநகர்,

அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங்கில் இன்று அதிகாலை 2.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாங்லாங் மாவட்டத்தில் 76 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நில நடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்