கார் விபத்தில் எம்.எல்.ஏ. பலி - அதிர்ச்சி சம்பவம்

எம்.எல்.ஏ. சென்ற கார் மீது சாலையில் எதிரே வந்த கார் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-12-15 09:49 GMT

அமராவதி,

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் சப்ஜி (வயது 57). இவர் இன்று மதியம் தனது காரில் எலூருவில் இருந்து பீமாவரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில், ஷெர்குவாடா பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த கார் எம்.எல்.ஏ. ஷேக் சப்ஜி சென்ற கார் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் எம்.எல்.ஏ. ஷேக் சப்ஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எம்.எல்.ஏ. ஷேக் சப்ஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்