கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-07 22:32 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிக்க செல்போன் செயலி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செல்போன் செயலி மூலமாக சந்தேகப்படும் படியாக சுற்றி திரியும் நபர்களின் கைரேகையை பதிவு செய்து, அவர்கள் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தால், அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த செல்போன் செயலி மூலமாக பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி, ராஜகோபால்நகர் போலீசாரும் செல்போன் செயலியை பயன்படுத்தி மண்டியா மாவட்டம் கே.ஆர்.எஸ். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ளனர்.

பெங்களூரு பைரவேஷ்வரா நகரில் தங்கி இருந்து அவர் ஆட்டோ ஓட்டி வந்தது தெரிந்தது. கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் நடந்த விசாரணக்கு ஆஜராகாமல் ஆட்டோ டிரைவர் சுற்றி திரிந்தார். அவரது கைரேகையை ராஜகோபால்நகர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், செல்போன் செயலியில் பதிவு செய்து பார்த்தபோது தான், கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்