அசாமில் 13 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சரண்
அசாமில் 13 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சரணடைந்தனர்.;
கோப்புப்படம்
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் மாவோயிஸ்டு பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான அருண்குமார் பட்டாச்சார்ஜி கடந்த மார்ச் 6-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அசாமில் ஒரு மாவோயிஸ்டு மாநில குழுவையும், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மாவோயிஸ்டு பிராந்தியத்தையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அருண்குமார் பட்டாச்சார்ஜியின் கைது, அந்த பயங்கரவாத இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் அருண்குமார் பட்டாச்சார்ஜியின் கூட்டாளிகளான மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் 13 பேர், அசாமின் திப்ருகர் மற்றும் சச்சார் மாவட்டங்களில் நேற்று போலீசில் சரணடைந்தனர்.