பெங்களூருவில் நாளை கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம்
பெங்களூருவில் நாளை பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.;
பெங்களூரு:
கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களுருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு அவர் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதாவின் தலைமை அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகிறார். பின்னர் இன்று இரவு குமரகிருபா விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை நடைபெறும் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அந்த கூட்டத்தை முடித்து கொண்டு இரவு 8 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த செயற்குழு கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக பா.ஜனதா செய்து வருகிறது.