புனேவில் கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா கைது

புனேவில் கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-25 16:26 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள கல்யாணிநகர் சந்திப்பு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக வந்த சொகுசு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஐ.டி. நிறுவன ஊழியர்களான அனில் அவதியா மற்றும் அவரது தோழி அஷ்வினி கோஷ்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சொகுசு காரை குடிபோதையில் ஓட்டி விபத்துக்கு காரணமாக இருந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன், உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிறுவனின் தந்தையை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிறுவனின் தாத்தாவும் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், குடும்ப ஓட்டிநரிடம் சிறுவனின் தாத்தா பணத்தை கொடுத்து விபத்திற்கான பழியை ஏற்கச் சொல்லி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். சிறுவனின் தாத்தாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் அனுமதி கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்