புத்தூரில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய ஜப்பான் வாலிபரிடம் போலீசார் விசாரணை

புத்தூரில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய ஜப்பான் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-07-24 00:15 IST

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கடியாரா பகுதியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனே புத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். புத்தூர் டவுன் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த சுயோசி என்று தெரியவந்தது.

சுற்றுலா விசாவில் பெங்களூருவிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் பெங்களூருவில் இருந்து மங்களூருவிற்கு வந்து, பொது இடங்களில் சுற்றி வந்தார். எதற்காக சுற்றினார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் அவரது நடவடிக்கையில் தொடர்ந்து சந்தேகம் இருப்பதால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இதுகுறித்து மங்களூருவில் உள்ள ஜப்பான் துதரக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் ஜப்பான் வாலிபர் குறித்த தகவலை சேகரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்