கணவரின் 5 வது திருமணத்தை தனது 7 குழந்தைகளுடன் சென்று நிறுத்திய 2-வது மனைவி

அஹமது 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டப்படி திருமண நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருந்த போது சின்ன சலசலப்பு ஏற்பட்டது;

Update:2022-09-01 17:48 IST

லக்னோ

உத்திர பிரதேசத்தின் சீதாபூரில் வசிக்கும் சபி அஹ்மது(55) . இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். அஹ்மது ரகசியமாக 5 வது திருமணம் செய்து கொள்ள விரும்பினார், எனவே அவர் தனது மனைவிகள் அனைவரையும் ஹஜ் யாத்திரைக்கு அனுப்பினார், மேலும் அவரது இரண்டாவது மனைவி மட்டுமே குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.

அஹமது கடந்த செவ்வாய் அன்று 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். திட்டமிட்டப்படி திருமண நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருந்த போது சின்ன சலசலப்பு ஏற்பட்டது. அஹமதின் இரண்டாவது மனைவி தனது 7 குழந்தைகளுடன் அங்கேவந்து அஹ்மது லீலைகள் பற்றி புட்டு புட்டு வைக்க வாக்குவாதம் உருவானது, இது பின்னர் சண்டையில் சென்று முடிந்தது.

குழந்தைகள், 'எங்கள் அப்பா மாத செலவுக்கு பணம் தருவதை நிறுத்திவிட்டார். என்னவென்று விசாரிக்க துவங்கிய போது தான் அவர் 5வது திருமணம் செய்துக்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்தோம். எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம்' என கூறினர்.

இதை தொடர்ந்து பெருமளவில் கூட்டம் கூடிவிட்டது. அங்கே, புதுமாப்பிள்ளை அஹ்மதை அடித்து உதைத்தனர். அப்போது மணப்பெண் வீட்டார் சைடு கேப்பில் உஷாராகி ஓடி ஆகிவிட்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்