40 சதவீத கமிஷன் ஆட்சியில் ஊழல் அனைத்து துறைகளிலும் பரவிவிட்டது; காங்கிரஸ் விமர்சனம்

40 சதவீத கமிஷன் ஆட்சியில் ஊழல் அனைத்து துறைகளிலும் பரவிவிட்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.;

Update:2022-08-21 21:12 IST

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

40 சதவீத கமிஷன் ஆட்சியில் ஊழல் அனைத்து துறைகளிலும் பரவிவிட்டது. விதான சவுதா சுவர்கள் முதல் கிராம பஞ்சாயத்து அலுவலக நாற்காலிகள் வரை லஞ்சம் கேட்கிறது. லஞ்சம் வழங்காவிட்டால் கோப்புகள் நகர்வது இல்லை என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. இது ஊழல் ஆட்சியின் கன்னத்தில் விழுந்த அறை ஆகும். பசவராஜ் பொம்மை, தனது ஆட்சியின் செயல்பாடுகளுக்கு காங்கிரசாரின் நற்சான்றிதழ் தேவை இல்லை என்று சொல்கிறார். சுரேஷ்கவுடா, யத்னால், மாதுசாமி ஆகியோரை தொடர்ந்து இப்போது பா.ஜனதாவை சேர்ந்த நேரு ஓலேகரும் அரசுக்கு எதிரான கருத்துகளை கூறியுள்ளார். இது உங்கள் ஆட்சியின் மோசமான செயல்பாடுகளை எடுத்து காட்டுகிறது.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்