4 நாடுகளுக்கு 28ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்த இண்டிகோ - காரணம் என்ன?

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2026-01-26 01:14 IST

டெல்லி,

தலைநகர் டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ விமான சேவை செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் ஈரான் வான்பரப்பை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றன.

இந்நிலையில், ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அசர்பைஜான் ஆகிய 4 நாடுகளுக்கு வரும் 28ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை, ஈரான் வான்பரப்பை பயன்படுத்தாமல் தவிர்த்தல் உள்ளிட்ட போன்ற காரணங்களால் அந்த வான்பரப்பை கடந்து செல்லும் ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அசர்பைஜான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை 28ம் தேதி வரை இண்டிகோ ரத்து செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்