டெல்லி: குடவோலை முறையை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு

குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Update: 2024-01-26 07:18 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார். டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,500 பெண் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

டெல்லி குடியரசு தின விழாவில் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற்றது. 'குடவோலை கண்ட தமிழ்க் குடியே வாழிய வாழியவே' என்ற பாடலுடன் ஊர்தி அணிவகுப்பாக சென்றது. பழங்காலத் தமிழகத்தின் தேர்தல் நடைமுறையை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற்றது.

 

Tags:    

மேலும் செய்திகள்