பணமதிப்பிழப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிராமணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆர்.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள், சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகளின் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்படி நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.