150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகம் - மத்திய மந்திரி தகவல்

150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-12 05:25 GMT

புதுடெல்லி,


150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விலைஅதிகரிக்காமல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக அளவில் கரோனா பரவல் தீவிரமடைந்தது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்தது. ந்இந்த சமயத்தில் இந்தியா வெளிநாடுகளுக்கு மருந்துப் பொருட்களை விலைஅதிகரிக்காமல் அனுப்பியது.

கரோனா கால கட்டத்தில் உலகளவில் கடும் நெருக்கடி பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. எனினும், லாப நோக்கு இல்லாமல், மனிதாபிமான முறையில் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது. மருந்துப் பொருட்களின் விலையை ஏற்றவும் இல்லை. அதன் தரத்திலும் சமரசம் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்