வரதட்சணை கொடுமை: திருமணமான 8 வாரங்களில் புதுப்பெண் தற்கொலை

நேஹாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.;

Update:2026-01-19 16:00 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் ஜந்தம்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் நேஹா (வயது 20). இவருக்கும் துல்ஹி பகுதியை சேர்ந்த விவேக் (வயது 24) என்ற இளைஞருக்கும் கடந்த நவம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப்பின் நேஹா தனது கணவர் குடும்பத்துடன் துல்ஹி பகுதியில் வசித்து வந்தார்.

இதனிடையே, திருமணமானது முதல் கூடுதல் வரதட்சணை கேட்டு நேஹாவை கணவர் விவேக்கும், அவரது குடும்பத்தினரும் தொல்லை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த நேஹா நேற்று மாலை கணவர் வீட்டில் உள்ள அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற போலீசார், நேஹாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நேஹாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேஹாவின் கணவன் விவேக், அவரது தாயார் மீனா என குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  வரதட்சணை கொடுமையால் திருமணமான 8 வாரங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்