பாஜக தேசிய தலைவர் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் நிதின் நபின்...?

பாஜக தேசிய தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.;

Update:2026-01-19 17:05 IST

டெல்லி,

பாஜக தேசிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஜே.பி.நட்டா. இவரது பதவி காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை பாஜக தொடங்கியது. இதையடுத்து பாஜக செயல் தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பாஜக தேசிய தலைவர் தேர்தலில் போட்டியிட நிதின் நபின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு படிவத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள லெட்சுமனனிடம் பாஜக மூத்த தலைவர்கள் ஜேபி நட்டா மற்றும் ராஜ்நாத் சிங் வழங்கினர். தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் நாளை நடைபெறும் தேர்தலில், பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தெர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்