வீட்டில் தோழியுடன் உல்லாசம்..லெஸ்பியன் உறவுக்கு தடை விதித்த கணவன்...ஆத்திரத்தில் மனைவி செய்த சம்பவம்
மால்தி தேவி ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வசித்து வந்தார்.;
பதேபூர்,
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் அசோதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திகார் கிராமத்தில் கடந்த 14-ம் தேதி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த விவசாயி சுமர் சிங் (வயது 33) என்றும், மர்ம நபர்களால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சுமர் சிங்கை அவரது மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமர்சிங்கின் மனைவி ரேணு தேவி (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மால்தி தேவி (வயது 27) என்ற பெண்ணுக்கும் லெஸ்பியன் உறவு இருந்து வந்துள்ளது.
மால்தி தேவி ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வசித்து வந்தார். சுமர் சிங் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வரும் மால்தி தேவி அங்கு ரேணுதேவியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து பொழுதை கழித்துள்ளார். தொடர்ந்து சுமர் சிங் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்திக்கொண்டு மால்தி தேவி அங்கு ரேணுதேவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒருநாள் விவசாய வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுமர் சிங் மனைவி மால்தி தேவியுடன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை நேரில் பார்த்த கணவர் அதிர்ச்சி அடைந்தார். மனைவிக்கு இப்படி ஒரு உறவு இருக்கிறதா? என நினைத்த சுமர்சிங் மனைவியை பார்த்து நீ ஒரு லெஸ்பியனா என கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளிக்காமல் ரேணு தேவி அமைதியாக இருந்து விட்டு சென்று விட்டார். தொடர்ந்து இவர்களது பழக்கம் எல்லை மீறிபோகவே சுமர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினரும் ரேணு தேவியை கடுமையாக வசைபாடினர். தொடர்ந்து மல்தி தேவியை எச்சரித்த அவர்கள் ரேணுதேவியை இனி பார்க்க கூடாது, வரக்கூடாது என்று தடை விதித்தனர். எனினும் ரேணு தேவியால் மால்தியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதையடுத்து அவர் யாருக்கும் தெரியாமல் மாலதிக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்தார்.
அதன்மூலம் அவர்கள் மணிக்கணக்கில் பேசினர். சுமர்சிங் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் சுமர் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக இருவரும் சேர்ந்து மால்தி தேவிக்கு நன்கு தெரிந்த ஜித்தேந்திர குப்தா என்பவரை தொடர்பு கொண்டனர். சுமர்சிங்கை கொலை செய்வதற்காக ஜித்தேர்ந்திர குப்தாவுக்கு ரூ.60 ஆயிரம் பேசப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக ரூ.8 ஆயிரம் கொடுத்த ரேணுதேவி கொலைக்கு பின்னர் மீதி பணத்தை தருவதாக கூறினார்.
இதையடுத்து ஜித்தேந்தர் குப்தா தனது கூட்டளிகள் ராஜு சோன்கர், ராம் பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து சுமர்சிங்கை கழுத்தை நெரித்து கொலை செய்தும், சுத்தியல் அடித்தும் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் உடலை அங்குள்ள வயல்வெளியில் வீசி சென்றனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரித்து ரேணு தேவி, மால்தி தேவி, கூலிப்படையை சேர்ந்த ராஜு சோன்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்திய கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் ஜித்தேந்தர் குப்தா, ராம் பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.