தார்வாரில் விபத்தில் உயிரிழந்த வாலிபரின் கண்கள் தானம்

தார்வாரில் விபத்தில் உயிரிழந்த வாலிபரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

Update: 2023-08-22 18:45 GMT

உப்பள்ளி-

தார்வாரில் விபத்தில் உயிரிழந்த வாலிபரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள்

கதக் மாவட்டம் லட்சுமேஷ்வரம் பகுதியை சேர்ந்தவர் சன்னபசப்பா (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சன்னபசப்பா தார்வார் மாவட்டம் ராயண்ணா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த 13-ந்தேதி சன்னபசப்பா தனது குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் ராயண்ணா பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

தேஜேஷ்வினி நகா் அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சன்னபசப்பா மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சன்னபசப்பா உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கண்கள் தானம்

அங்கு அவர்களுக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சன்னபசப்பா நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், சன்னபசப்பாவின் உறவினர்கள் அவரின் 2 கண்களை தானம் செய்வதற்கு முன்வந்தனர்.

இதையடுத்து டாக்டர்கள் சன்னபசப்பாவின் 2 கண்களை அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அந்த கண்கள் மற்றொருவருக்கு பொருத்தப்பட்டது. இந்த துக்கநேரத்திலும் சன்னபசப்பாவின் உறவினர்கள் மனித நேயம் காட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்