பாதுகாப்புத்துறை கண்காட்சியை முன்னிட்டு டிஆர்டிஓ உருவாக்கியுள்ள ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லா படகு!

பாதுகாப்புத் துறை கண்காட்சியை முன்னிட்டு ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லா படகு சோதனை நடந்தது.

Update: 2022-10-06 03:15 GMT

புனே,

பாதுகாப்புத் துறை கண்காட்சியின் 12வது பதிப்பு குஜராத்தின் காந்திநகரில் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாதுகாப்புத் துறை கண்காட்சி அக்டோபர் 18 முதல் 22 வரை காந்திநகரில் நடைபெற உள்ளது.

பாதுகாப்புத் துறை கண்காட்சியை முன்னிட்டு புனேவில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட ஆளில்லா, ஆயுதம் பொருத்தப்பட்ட படகு சோதனை நடந்தது.

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள படகு சோதனை பாமா அஸ்கேட் அணையில் நேற்று நடந்தது.

இது குறித்து டிஆர்டிஓ அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் பிஎம் நாயக் கூறுகையில்:-

இந்த படகில் மனிதர்கள் இல்லாமல் தரைதளத்திலிருந்து கொண்டு அதை இயக்கலாம். இந்த படகு கண்காணிப்பு, உளவு மற்றும் ரோந்து பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏதேனும் கிளர்ச்சி ஏற்பட்டால் படகில் ஆயுதமும் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்