அருணாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது.

Update: 2023-07-22 05:50 GMT

இடா நகர்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது. நேற்று மணிப்பூர், ராஜஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் வடகிழக்கு மாநில மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் இன்று காலை 6:56 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், தவாங்கின் கிழக்கு-தென்கிழக்கே 64 கிமீ தொலைவில் மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

முன்னதாக நேற்று மணிப்பூர் மாநிலம் உக்ருல் பகுதியில் அதிகாலை 5.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.5 ரிக்டர் அளவாக பதிவானது. அதேபோல்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று அதிகாலை அரை மணி நேரத்தில் மூன்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்