ஓசூர்-கர்நாடகா எல்லையில் உள்ள பட்டாசு கடையில் வெடி விபத்து

ஓசூர்-கர்நாடகா எல்லையில் உள்ள பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

Update: 2023-10-07 12:23 GMT

பெங்களூரு,

கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று மாலை எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறின.

இதனால் பட்டாசு கடை முன்பு நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி, இரண்டு கனரக வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் பட்டாசு கடை உரிமையாளர், ஊழியர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்து காரணமாக ஓசூர்-கர்நாடகா எல்லைப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்