பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு

பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2022-09-01 07:09 GMT

மும்பை

1993-இல் மும்பையில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை, தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. அவா் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருகிறாா். பாகிஸ்தான் அரசு அவருக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது.

இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் ஒரு பயங்கரவாதக் குழுவை அமைத்து, நாட்டுக்குள் வெடிபொருள்கள், பயங்கர ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் மற்றும் போதைப் பொருள்களைக் கடத்தல் போன்றவற்றில் தாவூத் இப்ராகிம் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தானில் இருந்து கொண்டு, அந்நாட்டின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் உதவியோடு, இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தாவூத் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ தெரிவித்துள்ளது.

தாவூத் மட்டுமின்றி அவனது கூட்டாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கும் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐ தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கூட்டாளிக்கும் வெவ்வேறு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தாவூத்துடன் தொடர்பிலிருக்கும் டைகர் மேமன், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா ஆகியர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்