குஜராத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு

குஜராத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-02-11 06:43 GMT

அகமதாபாத்,

துருக்கி - சிரியாவில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்