யோகா ஆசிரியர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி மாணவனின் கை எலும்பு முறிந்தது

பெங்களூருவில் யோகா ஆசிரியர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி மாணவனின் கை எலும்பு முறிந்தது.

Update: 2023-01-11 18:45 GMT

எச்.ஏ.எல்.:

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் வாய்பேசாத முடியாத 10 வயது மாணவன் ஒருவன் படித்து வருகிறான். இந்த நிலையில் அந்த மாணவனின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய பள்ளி நிர்வாகத்தினர், உங்கள் மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினர்.

இதனால் பள்ளிக்கு சென்ற மாணவனின் பெற்றோர் தங்களது மகனை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது மாணவன் தனது கை வலி இருப்பதாக கூறினான். இதனால் அந்த மாணவனுக்கு கையில் எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது மாணவனின் வலது கையில் எலும்புகள் முறிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. யோகா வகுப்பின் போது யோகா சரியாக செய்யாததால் அந்த மாணவனை, யோகா ஆசிரியர் தாக்கியதாகவும், இதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் எச்.ஏ.எல். போலீசார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்