மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான வயது வரம்பு நீக்கம் - காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை

மருத்துவ காப்பீடு எடுப்பதற்கான வயது வரம்பினை நீக்கம் செய்து காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-04-21 22:26 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. தற்போது இந்த வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) நீக்கியுள்ளது. அதாவது, இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீட்டை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக காப்பீடு திட்டங்களை செயல்படுத்துமாறு மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களை ஐஆர்டிஏஐ கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என அனைவரும் பயனடையும் வகையிலான காப்பீடுகளை அறிமுகப்படுத்தவும், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கனெ பிரத்யேக காப்பீடுகளை செயல்படுத்தவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் காப்பீடு எடுக்கும் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை குறைக்கவும் ஐஆர்டிஏஐ அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்